COVID – 19: அபுதாபியில் நுழைந்த 6 நாட்களுக்குப் பிறகு பி.சி.ஆர் பரிசோதனை(PCR Test) தேவை
பார்வையாளர்கள் (Visitors) மற்றும் குடியிருப்பாளர்கள் (Residents) அபுதாபியில் நுழைந்து தொடர்ச்சியாக ஆறு நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருந்தால், அவர்கள் தங்கிய ஆறாவது நாளில் பி.சி.ஆர் பரிசோதனை (PCR Test) கட்டாயம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
தொற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனைகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப, அமீரகத்தில் நுழைவதற்கான புதிய COVID -19 விதிமுறைகள் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டுவரபடுகிறது என்று அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது

