பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: குரோஷியாவின் போர்னா கோரிக் (Borna Coric) 2 ஆம் சுற்றுக்கு முன்னேற்றம் !
பாரீஸ்: பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் குரோஷியாவின் போர்னா கோரிக் (Borna Coric) ஹங்கேரி வீரர் மார்டன் ஃபக்சோவிக்ஸை வீழ்த்தி 2-ஆம் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
போட்டித் தரவரிசையில் 15-ஆம் இடத்தில் இருக்கும் அவர் முதல் சுற்றில் ஹங்கேரி வீரர் மார்டன் ஃபக்சோவிக்ஸை 7-6 (7/5), 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதர முதல் சுற்றுகளில் இத்தாலியின் சால்வடோர் கருசோவை பிரான்ஸ் வீரர் கோரெண்டின் மௌடெட் 3-6, 7-6 (7/2), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். அர்ஜெண்டினாவின் ஃபெடரிகோ டெல்போனிஸை ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் 6-2, 6-3 செட் கணக்கில் வீழ்த்தினார்.
ஸ்பெயினின் ஆல்பர்ட் ரமோஸ் வினோலஸை அமெரிக்க வீரர் மார்கோஸ் கிரோன் 6-3, 4-6, 6-1 செட் கணக்கில் வென்று வீழ்த்தினார். செர்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச்சை ஸ்பெயின் வீரர் ஃபெலிசியானோ லோபஸ் 7-6 (13/11), 6-1 என்ற செட்களில் தோற்கடித்தார்.

