Monday, March 2, 2026
Politics

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றிக்கு அமீரக தலைவர்கள் வாழ்த்து !

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்கு அமீரக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தேர்தல் முடிவு சனிக்கிழமை இரவு வெளியானதை தொடர்ந்து அமீரகத்தின் பிரதமரும் துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், அபுதாபியின் இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றதற்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் அமீரகம் இடையே ஒரு வலுவான வரலாற்று சிறப்பு மிக்க நட்புறவு உள்ளது என்றும், அது மென்மேலும் வலுவடையும் என்பதை எதிர்பார்ப்பதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.