அபுதாபியில் இந்த 10 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு !
அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட ‘பசுமை பட்டியல்’ (Green List) இடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த இடங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு அபுதாபியில் தரையிறங்கிய பின்னர் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் மட்டுமே அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
‘பசுமைப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ள நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்கள் ஆகியவை சர்வதேச முன்னேற்றங்களின் அடிப்படையில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
மேலும், இந்த பட்டியலானது குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் குடியுரிமையுள்ளவர்களுக்கு அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
பசுமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 10 நாடுகளின் விவரங்கள் :
Australia
Bhutan
Brunei
China
Greenland
Hong Kong (SAR)
Iceland
Mauritius
New Zealand
Singapore

