அமீரகத்தில் மார்ச் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு !
அமீரக எரிபொருள் விலைக் குழு (UAE fuel price committee) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 2021 க்கான எரிபொருள் விலையை அறிவித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில், சூப்பர் 98 பெட்ரோலுக்கு லிட்டருக்கு Dh 2.12 ம் (பிப்ரவரியில் Dh 1.91 லிருந்து), ஸ்பெஷல் 95 க்கு ஒரு லிட்டருக்கு Dh 2.01 ம் (பிப்ரவரியில் Dh 1.80 லிருந்து) நிர்ணயித்துள்ளது.
டீசலுக்கு மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு Dh 2.15 (பிப்ரவரியில் Dh 2.01 லிருந்து) ஆக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

