Monday, March 2, 2026
National

அபுதாபி வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்கு அளிக்கப்படும் நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்ட் (Updated Green List) வெளியீடு !

அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை (DCT Abu Dhabi), 13 வெவ்வேறு இடங்கள் உட்பட ‘புதுப்பிக்கப்பட்ட கிரீன் லிஸ்ட்’ (Updated Green List) இடங்களின் விவரங்களை மார்ச் 8, திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த இடங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு அபுதாபியில் தரையிறங்கிய பின்னர் கட்டாய தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் மட்டுமே அவர்கள் பி.சி.ஆர் (PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

முந்தைய கிரீன் லிஸ்டுடன் ஒப்பிடும்போது, ​​புதிய லிஸ்டில் கஜகஸ்தான், மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

‘கிரீன் லிஸ்ட்டில்’ சேர்க்கப்பட்டுள்ள நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்கள் ஆகியவை சர்வதேச முன்னேற்றங்களின் அடிப்படையில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

கிரீன் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ள 13 நாடுகளின் விவரங்கள் :

Australia

Bhutan

Brunei

China

Greenland

Hong Kong (SAR)

Iceland

Kazakhstan

Mauritius

Morocco

New Zealand

Saudi Arabia

Singapore