Monday, March 2, 2026
World

ஆப்பிரிக்க நாட்டில் தங்க மலையை கண்டுபிடித்த கிராமவாசிகள்…அதிர வைக்கும் வீடியோ !

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் அமைந்துள்ள காங்கோவில் 60-90% தங்க மணலுடன் கண்டுபிடிக்கப்பட்ட மலையிலிருந்து கிராமவாசிகள் மலையைத் தோண்டி தங்கத்தை அள்ளிச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்நிலையில் உடனடியாக மலையில் சுரங்கத்தை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கோவின் லுஹிஹியில் உள்ள கிராமவாசிகள், அந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையின் மண்ணில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரான அஹ்மத் அல்கோபரி தனது டுவிட்டர் பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பலர் ஒரு சில கருவிகளை கொண்டு அம்மலையை தோண்டுவதாக காட்டப்படுகிறது. மேலும் சிலர் தரையை வெறும் கையால் தோண்டும் காட்சி காணப்படுகிறது.

கிராமவாசிகள் மண்ணை வீட்டுக்கு எடுத்துச் சென்று அதை கழுவி தங்கத்தை பிரித்து எடுப்பது போன்ற காட்சியும் வைரலாகி வருகிறது. அது மத்திய ஆப்பிரக்கா நாடான காங்கோவில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் போட்டிப்போட்டு தங்கத் தாது மண்ணை தோண்டி எடுத்து செல்லும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிறது.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அந்நாட்டு அரசு, மலையை தோண்டுவதற்கும் உள்ளே நுழைவதற்கும் தடை விதித்து பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டனர். மேலும், அப்பகுதியில் வைரம், தாமிரம் போன்ற தாதுக்களின் வளம் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.