துபாய்-மணிலா விமான பயணம் Dh300 மட்டுமே…விமான நிறுவனத்தின் குறைந்த கட்டண சேவை அறிவிப்பு !
பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய விமான நிறுவனமான செபு பசிபிக், ஐந்து நாட்களுக்கு துபாய்-மணிலா இடையேயான பயணத்திற்கு Dh300 அடிப்படை கட்டணமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் தேசிய விமான நிறுவனமான இது தனது 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த மாதம் வழங்கும் நான்காவது குறைந்த விலை பயனச்சீட்டு விற்பனையாகும். இந்த விற்பனை மார்ச் 14 முதல் மார்ச் 18 வரை (5 நாட்களுக்கு மட்டும்) , இது மே 1 முதல் ஜூலை 31, 2020 வரையிலான பயண காலத்தை உள்ளடக்கியது என்று அறிவித்திருக்கிறது.
இந்த விமான நிறுவனம் இப்போது துபாயிலிருந்து மணிலாவுக்கு ஐந்து வாராந்திர விமானங்களையும், மணிலாவிலிருந்து துபாய்க்கு வாரந்தோறும் நான்கு விமானங்களையும் இயக்குகிறது.
துபாயில் இருந்து மணிலாவுக்கு பயணிப்பவர்கள் உட்பட பயணிகள் எந்த கட்டணமும் இன்றி தேவைப்படும் அளவுக்கு பல முறை மறு பதிவு செய்ய அனுமதிக்கும் வகையில், பயனச்சீட்டு மாற்றத்திற்கான கட்டணங்களை நிரந்தரமாக நீக்குவதாகவும் விமான நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
செபூ பசிபிக் 2021 ஜூன் 30 வரை துபாயில் இருந்து மணிலா செல்லும் பயணிகளுக்கு 25 கிலோ சாமான்களை இலவசமாக வழங்குகிறது. மேலும், முன்பே வாங்கிய 40 கிலோ ப்ரீபெய்ட் சாமான்களைக் கொண்ட பயணிகள் தங்களின் முன்பதிவில் 25 கி. தானாகவே இலவசமாகப் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

