Monday, March 2, 2026
National

அபுதாபி: பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் Dh1,000 முதல் Dh100,000 வரை அபராதம் ! காவல்துறை எச்சரிக்கை !

பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமீரகம் எப்போதும் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த விதிமுறைகள் கொரோனா தொற்று காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக உள்ளது.

அபுதாபியின் நகராட்சி துறை கட்டுப்பாட்டாளர், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) மற்றும் அதன் கழிவு மேலாண்மை மையம், தத்வீர் (Tadweer) ஆகியவை சமீபத்தில் குடியிருப்பாளர்களுக்கு குப்பைக் கொட்டுதல், முறையற்ற கழிவுகளை அகற்றுதல் போன்ற குற்றங்களுக்கு பொருந்தக்கூடிய அபராதங்கள் குறித்து நினைவூட்டியுள்ளது. மேலும், மத்திய போக்குவரத்து சட்டத்தின் ஒரு பகுதியாக, சாலைகளில் குப்பை கொட்டுவதற்கான பிற அபராதங்களும் அபுதாபி காவல்துறையினரால் விதிக்கப்படுகின்றது.

அபாரதங்களின் விவரங்கள் பின்வருமாறு:

  • பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு Dh1,000 அபராதம். எச்சில் துப்புதல் போன்ற செயல்களும் இதில் அடங்கும்.
  • சாலைகளில் குப்பை கொட்டிய வாகன ஓட்டிகளுக்கு Dh1,000 அபராதம். மேலும், ஓட்டுநரின் பதிவில் ஆறு போக்குவரத்து கருப்பு புள்ளிகளும் (Six traffic black points) சேர்க்கப்படும்.
  • பண்ணைக் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் போன்ற விவசாய கழிவுகளை (Agricultural Waste) நியமிக்கப்படாத இடங்களில் கொட்டுவதற்கு Dh10,000 அபராதம்.
  • நியமிக்கப்படாத இடங்களில் கட்டிட பொருள் கழிவுகளை (Building Material Waste) கொட்டுவதற்கு Dh10,000 அபராதம்.
  • நியமிக்கப்படாத இடங்களில் கட்டுமானம் அல்லது கழிவுநீர் கழிவுகளை (Construction & Sewage Waste) கொட்டுவதற்கு Dh100,000 அபராதம்.