அபுதாபி: நெடுஞ்சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு அபராதம் விதித்த காவல்துறை…வீடியோ உள்ளே !
அபுதாபியில் வெள்ளிக்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு வாகனம் பல கார்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அபுதாபி காவல்துறையின் ட்வீட்டில், தாறுமாறாக வாகனத்தை ஓட்டிய ஓட்டுநரால் கடுமையான போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. பின்னர் அவருக்கு 800 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்பட்டு நான்கு கருப்பு புள்ளிகள் (Four Black Points) வழங்கப்பட்டது என்று அறிவித்துள்ளது.
இந்த கொடூரமான காட்சியில் ஒரு எஸ்யூவி (SUV) அதிவேகத்தில் சென்று போக்குவரத்து நெரிசலில் மோதுவதைக் காட்டுகிறது, இவ்வீடியோவை அபுதாபி காவல்துறை, அபுதாபி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. ‘சாலை பாதுகாப்பை பேணுங்கள்’ (Be Road Safe) என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தாறுமாறாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘உங்கள் கருத்து’ (Your Comment) என்ற முயற்சியின் ஒரு பகுதியாகவும் இது வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

