அமீரகத்தில் ரமலான் நோன்பு நோற்கும் மற்றும் திறக்கும் நேரங்கள் அறிவிப்பு !
புனித ரமலான் மாதம் ஏப்ரல் 13 ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கும் வாய்ப்புள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் அரபு ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஷவ்வால் 1 ல் அதாவது மே 13 வியாழக்கிழமை ஈத் அல் பித்ர் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபியில் ரமலான் முதல் நாள் அதிகாலை 4.43 மணிக்கு நோன்பு நோற்பது தொடங்கும் என்றும் இப்தார் என்னும் நோன்பு திறத்தல் மாலை 6.47 மணிக்கு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாள் 1 ல் நோன்பு நோற்கும் மொத்த நேரம் 14 மணி 4 நிமிடங்களாக இருக்கும்.
ரமலான் 30 ல், நோன்பு அதிகாலை 4.15 மணிக்கு தொடங்கி இரவு 7.01 மணிக்கு முடிவடையும். அதாவது நாள் 30 ல் நோன்பு நோற்கும் நேரம் 14 மணி 46 நிமிடங்களாக இருக்கும்.
ஸஹர் மற்றும் இப்தார் நேரங்களைப் பொறுத்தவரை புஜைராவும் கோர் ஃபக்கானும் அபுதாபியை விட 7 நிமிடங்கள் முன்னதாகவே இருக்கும் நிலையில் அல் குவைஃபாத் மற்றும் அல் சிலா 11 நிமிடங்கள் பின்தங்கி இருக்கும். புஜைராவுக்கும் அல் குவைஃபாத்துக்கும் இடையிலான நேர வேறுபாடு 18 நிமிடங்கள் ஆகும்.

