Monday, March 2, 2026
EducationGovernmentNational

அமீரகத்தில் புதிய பள்ளி காலண்டர் வெளியீடு !

2020-21 கல்வியாண்டு முதல் 2022-2023 கல்வியாண்டு வரை மூன்று கல்வியாண்டுகளுக்கான பள்ளி காலண்டரை அமீரக அரசு அறிவித்துள்ளது. பள்ளி ஆண்டின் தொடக்கம் மற்றும் முடிவு, பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை, பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பிற விவரங்கள் யாவும் இந்த காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமீரகத்தின் துணைப் பிரதமரும், ஜனாதிபதி விவகார அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான்(Sheikh Mansour bin Zayed Al Nahyan) தலைமையில், நடப்பாண்டையும் சேர்த்து மொத்தம் மூன்று கல்வியாண்டுகளுக்கான பள்ளி காலண்டர்களுக்கு, மினிஸ்டேரியல் டெவலப்மென்ட் கவுன்சில்(Ministerial Development Council) ஒப்புதல் அளித்துள்ளது.

கல்வியாண்டுகளின் ஆரம்பம்: (பொது மற்றும் தனியார் பள்ளிகள்)
1. நடப்பு கல்வியாண்டு கடந்த ஆகஸ்ட் 30 ம் தேதி தொடங்கியது.
2. அடுத்த கல்வியாண்டு அதாவது 2021-2022 கல்வியாண்டு ஆகஸ்ட் 29, 2021 அன்று துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. 2022-2023 கல்வியாண்டு ஆகஸ்ட் 28,2022 அன்று தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால விடுமுறைகள்: (பொது மற்றும் தனியார் பள்ளிகள்)
1. இந்த கல்வியாண்டில் அனைத்து பொது மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள், டிசம்பர் 13 முதல் டிசம்பர் 31 வரை குளிர்கால விடுமுறையை பெறுவார்கள்.
2. 2021-2022 கல்வியாண்டில் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 30 வரையிலும், 2022-2023-ம் கல்வியாண்டில் டிசம்பர் 11 முதல் ஜனவரி 21, 2023 வரையிலும் குளிர்கால விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நாட்களின் எண்ணிக்கை:
1. நடப்பு மற்றும் 2022-23 கல்வி ஆண்டுகள், மொத்தம் 188 பள்ளி வேலை நாட்களை கொண்டிருக்கும் என்றும் 2021-2022 கல்வியாண்டானது 186 பள்ளி வேலை நாட்களை கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2.அமீரக அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3. பிற பள்ளிகள் குறைந்தபட்சம் 182 வேலை நாட்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வசந்த விடுமுறை(spring vacations):
1. அமீரக அரசு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து பொதுப் பள்ளிகளுக்கும் நடப்பு கல்வியாண்டில் இரண்டு வார வசந்த விடுமுறைகள்(spring vacations) மார்ச் 28, 2021 முதல் ஏப்ரல் 15 2021 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. 2021-22 கல்வியாண்டில் மார்ச் 27, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை வசந்த விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. 2022-23 கல்வியாண்டில் மார்ச் 26, 2023 முதல் ஏப்ரல் 13, 2023 வரை வசந்த விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
1. பாடத்திட்டத்தைப் பொருட்படுத்தாமல் எந்தப் பள்ளியும் 8.2 வாரங்களுக்கு மேல் கோடை விடுமுறையை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
2. 2020-21 கல்வியாண்டிற்கான பள்ளியின் கடைசி நாள் ஜூலை 1, 2021 என்றும் கூறப்பட்டுள்ளது.