Monday, March 2, 2026
InternetNationalTechnology

உலகின் அதிவேக மொபைல் நெட்வொர்க் சேவை – முதலிடம் பிடித்த எடிசலாட் (ETISALAT)

இந்த ஆண்டில் உலகளவில் அதிவேக மொபைல் நெட்வொர்க் சேவை வழங்குவதில் அமீரகத்தின் எடிசலாட்டை (ETISALAT), பிராட்பேண்ட் (BROADBAND) மற்றும் மொபைல் நெட்வொர்க் அப்ளிகேசனான ஓக்லா (OOKLA) அங்கீகரித்துள்ளதாக அமீரக தொலைத்தொடர்பு ஆபரேட்டரான எடிசலாட் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.

சிறந்த நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கான அதிவேக (speedest) விருதுகள் ஒவ்வொரு நெட்வொர்க் ஆபரேட்டர்களின் பதிவிறக்கம் (DOWNLOAD) மற்றும் பதிவேற்றம் (UPLOAD) செய்யும் அளவை உள்ளடக்கிய ‘ஸ்பீட் ஸ்கோரை (SPEED SCORE) பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகின்றன.

எடிசலாட் நெட்வொர்க்கின் பதிவிறக்க வேகம் 115.89 mbps மற்றும் ஒட்டுமொத்த தரவரிசை ‘ஸ்பீட் ஸ்கோரில்’ 98.78 mbps எனவும் ஓக்லா ஸ்பீடெஸ்ட் தரவுகளின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஸ்பீட் ஸ்கோரில் 90 ஐ விடவும் உயர்ந்த இடத்தைப் பெற்ற ஒரே ஆபரேட்டர் எடிசலாட் தான் என அந்த ஆய்வு முடிவில் ஓக்லா அறிவித்துள்ளது

நெட்வொர்க் வேகத்தைப் பொறுத்தவரை எடிசலாட் உலகின் முதலிடத்தில் உள்ளது மற்றும் அதிகாரப்பூர்வமாக உலகின் அதிவேக மொபைல் நெட்வொர்க் மற்றும் வேகமான மொபைல் ஆபரேட்டராக வழங்கப்படுவதோடு மட்டுமல்லாமல், GCC மற்றும் அரபு பிராந்தியத்தில் மிக விரைவான நிலையான பிராட்பேண்ட் நெட்வொர்க்குடனும் எடிசலாட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று ஓக்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான டக் சட்டில்ஸ் (Doug Suttles) கூறியிருந்தார்.