பாகிஸ்தானில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 -ஐ நெருங்கியது.

பாகிஸ்தான் முழுவதும் மழையின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளதாக நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (N.D.M.A) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூன் 15 முதல் ஆகஸ்ட் 29 வரை உயிரிழந்தவர்களின் விவரங்களை தனது இணையதளத்தில் பகிர்ந்து கொண்ட NDMA சனிக்கிழமையன்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு, ராணுவம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட துறைகளால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இதில் கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்தில் 48 பேர் உயிரிழந்தனர் மற்றும் 42 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், மாகாண தலைநகர் கராச்சியில் மட்டும் 47 பேர் உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில் கராச்சியில் பெய்த 604 மிமீ மழை பலத்த மழையாக பதிவாகியுள்ளது, .
பலூசிஸ்தான் மாகாணத்தில் பெய்த மழையால் பேரழிவுகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, அங்கு பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு ஏராளமானோர் தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடாரங்கள், உணவுப் பொருட்கள், போர்வைகள், கொசு வலைகள் போன்றவற்றை N.D.M.A வழங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.