தமிழகம்: பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலி !
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அச்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை அதிகாரி ராஜ நாராயணன் தெரிவித்துள்ளார்.
“இன்று பிற்பகல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் இறந்துள்ளனர் மற்றும் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் இந்தியாவின் பட்டாசு தயாரிக்கும் நகரின் தலைநகரமாக திகழ்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு பைரோடெக்னிக்ஸ் ( pyrotechnics) தொழிலைச் சார்ந்து உள்ளனர். இதனால் இங்கு விபத்துகள் ஏற்படுவதும் சாதாரண நிகழ்வாகும்.
கொரோனா தாக்கத்தால் மார்ச் மாதத்தில் நாடு தழுவிய முழு அடைப்பு அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் நடந்த இரண்டு தனித்தனியான சம்பவங்களில்11 பேர் உயிரிழந்தனர். மேலும், 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.