2021 புர்ஜ் கலீஃபா கொண்டாட்டம்: வாகன ஓட்டுனர்களுக்கு கூடுதலாக 16,700 பார்க்கிங் இடங்கள் அறிவித்த RTA !
2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் இன்று மாலை 4 மணி முதல் மூடவிருக்கும் புர்ஜ் கலீஃபாவைச் சுற்றியுள்ள சாலைகளின் பட்டியலை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ளது. புத்தாண்டு நிகழ்ச்சிகளை காண்பதற்கு வரும் பார்வையார்கள் தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு வசதியாக கூடுதலாக பார்க்கிங் இடங்களை RTA அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் புர்ஜ் கலீஃபாவில் நிகழவிருக்கும் வான வேடிக்கைகளைக் காண வருகை தரும் பார்வையாளர்களுக்காக சுமார் 16,700 கூடுதல் பார்க்கிங் இடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை எளிதில் பார்க்கிங் செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன ஓட்டுனர்கள் புதிய ஜபீல் எஸ்ட்டென்ஷன் (Zabeel Extension) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.