Friday, October 17, 2025
National

ஷேக் ஹம்தான் மறைவு…3 நாட்கள் விடுமுறை, 10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..அமீரக அரசு அறிவிப்பு !

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரகத்தின் நிதியமைச்சருமான மதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று காலமானதாக துபாய் ஆட்சியாளர் அறிவித்தார்.

இந்நிலையில், துபாயில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹம்தானின் மறைவை ஒட்டி துக்கம் அனுசரிக்கும் விதமாக இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு அமீரக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அனைத்துத் துறைகளுக்கும் அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமீரகத்தின் நிதிக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்தியதில் ஷேக் ஹம்தானின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தெரிவித்தார்.