Saturday, October 18, 2025
NationalTravel

துபாய் டாக்ஸி வேன்களில் 4 நபர்கள் வரை இனி பயணிக்கலாம்

அமீரகத்தில் கொரோனா தொற்று காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களில் மூன்று நபர்கள் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. டாக்ஸிகளில் இரு பயணிகள் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், துபாயில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்துத் துறை நெறிமுறைகளில் தற்பொழுது ஹலா டாக்ஸி வேன்களில் (Hala Taxi) நான்கு பயணிகள் வரை பயணிக்க அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த டாக்ஸி சேவைக்காக கரீம் அப்ளிகேஷன் மூலம் (Careem App) பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சேவை துபாய் நகரில் குறிப்பிட்ட அளவிலேயே இயங்கி வருகிறது என்பதால் இதில் பயணிப்பதற்கு கரீம் அப்ளிகேஷனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காத்திருக்கும் நேரத்தையும் முன்பணத்தையும் அப்ளிகேஷன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். தற்பொழுது ஹலா வேன்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் (Average Arrival Time) 6 நிமிடங்களாக இருக்கும் என்று ஹலா நிறுவனம் தெரிவித்துள்ளது.