தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 52 பேர் பலி !
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 52 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. பல மாதங்களாக 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 4-வது இடத்துக்கு பின் நகர்ந்துள்ளது.
புதன்கிழமையன்று மாவட்டங்களில் கொரோனா மரணங்களின் விவரம்: (அடைப்புக்குள் மொத்த கொரோனா மரண எண்ணிக்கை)
அரியலூர் 1 (45) செங்கல்பட்டு 4 (612) சென்னை- 11 (3452) கோவை- 5 (507) கடலூர்- 2 (257) தருமபுரி- 0 (41) திண்டுக்கல் – 3 (178) ஈரோடு – 0 (104) கள்ளக்குறிச்சி- 0 (99) காஞ்சிபுரம் – 2 (353) கன்னியாகுமரி – 1 (237) கரூர்- 0 (43) கிருஷ்ணகிரி- 2 (84) மதுரை- 3 (402) நாகப்பட்டினம் – 1 (93) நாமக்கல் – 0 (88) நீலகிரி – 1 (32) பெரம்பலூர்- 0 (20) புதுக்கோட்டை- 0 (146) ராமநாதபுரம்- 0 (124) ராணிப்பேட்டை- 1 (173) சேலம் – 2 (380) சிவகங்கை – 0 (123) தென்காசி – 0 (148) தஞ்சாவூர்- 2 (207) தேனி- 0 (187) திருப்பத்தூர்- 0 (114) திருவள்ளூர்- 3 (595) திருவண்ணாமலை- 0 (248) திருவாரூர் – 2 (84) தூத்துக்குடி- 0 (125) நெல்லை- 1 (205) திருப்பூர்- 1 (161) திருச்சி – 1 (158) வேலூர்- 3 (279) விழுப்புரம்- 0 (102) விருதுநகர்- 0 (215)

