ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிக்கான அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்…
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஏறக்குறைய 6 மாதங்கள் நடக்கவிருக்கிறது.
கோவா:
மூன்று ஸ்டேடியங்களில் நடக்கவிருக்கும் இந்த போட்டியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 11 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான முதற்கட்ட போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
இதன்படி வருகிற நவம்பர் 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி (கொல்கத்தா), கேரளா பிளாஸ்டர்சை (இரவு 7.30 மணிக்கு) சந்திக்கிறது. உள்ளூர் அணியான எப்.சி. கோவா முதல் சவாலை முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யுடன் (நவம்பர் 22-ந்தேதி) தொடங்குகிறது.
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியுடன் நவம்பர்.24-ந்தேதி மோதுகிறது. தற்போது ஜனவரி 11-ந்தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள அட்டவணை பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

