Monday, March 2, 2026
HealthNational

கொரோனா தடுப்பூசியைப் பெற்ற துபாய் ஆட்சியாளர் !

அமீரகத்தின் பிரதமரும் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

“பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெறவும், அனைவரையும் காக்கும்படியும் நாம் கடவுளிடம் பிரார்த்திப்போம்” என ஷேக் முஹம்மது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் தனக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியுட்டுள்ளார்.

“கொரோனா தடுப்பூசியைப் பெறும் உலகின் முதல் நாடாக அமீரகத்தை உருவாக்க கடினமாக உழைக்கும் அனைத்து குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அமீரகத்தின் எதிர்காலம் சிறப்பானதாகவும் அழகானதாகவும் இருக்கும்” என ஷேக் முகமது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்டத்தின் ஆய்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பு ஊசியை அளிக்க அமீரக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அபுதாபி பள்ளி ஆசிரியர்கள், ஷார்ஜா விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டிருக்கிறது.

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் குரூப் 42 மற்றும் சீனாவின் மருந்தக துறை சினோபார்ம் (Sinopharm) ஆகியவை இணைந்து இந்த மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொண்டுவருகின்றன .

மேலும் இந்த கொரோனா தடுப்பு ஊசி அமீரகத்தின் முக்கிய தலைவர்கள் சிலருக்கும் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.