அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்த துபாய் ஆட்சியாளர் !
அமீரகத்தின் பிரதமரும் துணைத் தலைவரும் துபாய் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், “அமீரக மக்கள் சார்பாக, உலகெங்கிலும் தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையின் ஒளி எப்போதும் நம்மை ஒன்றிணைத்து, ஒரு நல்ல நாளை நோக்கி முன்னேறட்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

