வாகன ஓட்டுனர்களுக்கு ஓர் நற்செய்தி ! 60 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தினால் 35% தள்ளுபடி – அபுதாபி காவல்துறை அறிவிப்பு !!
அபுதாபி காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், போக்குவரத்து விதிகளை மீறி ஓட்டும் வாகன ஓட்டிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை 60 நாட்களுக்குள் செலுத்தினால் அவர்களுக்கு 35 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை ட்விட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில், போக்குவரத்து அபராதத் தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் அபராதம் அனைத்தையும் எளிதாக்குவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் தாமதமாக அபராதம் செலுத்துதல் (ஏதேனும் இருந்தால்) அதற்கு வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.
காவல்துறை முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஆண்டு முழுவதும் நடைமுறையில் இருந்த போக்குவரத்து அபராதங்களுக்கான இந்த தள்ளுபடி சலுகை 2020 டிசம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக கூறப்பட்டது.
மேலும், வாகன ஓட்டிகள் www.adpolice.gov.ae மூலமாகவோ அல்லது AD போலீஸ் பயன்பாட்டின் (AD Police App) மூலமாகவோ போக்குவரத்து அபராதம் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

