சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு மற்றும் சுபநிகழ்ச்சிகளை நடத்த 10 நாட்களுக்குத் தடை !!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் நிறுத்துவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இச்செய்தியை சவூதி பத்திரிகை நிறுவனம் வியாழக்கிழமை அதிகாலை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை கொண்டு வெளியிட்டுள்ளது.
திருமணங்கள், கார்ப்பரேட் கூட்டங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், விருந்து உபசரிப்புகள், விருந்து அரங்குகள் மற்றும் திருமண அரங்குகள் அல்லது ஹோட்டல்களுடன் கூடிய அரங்குகள், வாடகை ஓய்வு இல்லங்கள் மற்றும் முகாம்களுக்கு 30 நாட்கள் அல்லது அதற்கு மேலும் தடை நீடிக்கப்படலாம்.
சமூக நிகழ்வுகளில் அடுத்த 10 நாட்களுக்குள் அதிகபட்சமாக 20 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது.
அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் 10 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சினிமாக்கள், உட்புற பொழுதுபோக்கு மையங்கள், உட்புற விளையாட்டு இடங்கள் அல்லது உணவகங்கள், வணிக வளாகங்கள், ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்களில் 10 நாட்கள் அல்லது அதற்கு மேல் தடை நீட்டிக்கப்படலாம்.
உணவகங்களில் இருந்து உணவருந்துதல் மற்றும் பார்சல் சேவை ஆகியவற்றுக்கு 10 நாட்கள் அல்லது அதற்கு மேல் தடை நீடிக்கப்படலாம்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், சவூதி குடிமக்கள், அந்நாடுகளில் இருந்து வரும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டும் சவூதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

