Friday, October 17, 2025
National

புதிய பொது பேருந்து வழித்தடத்தை (New Public Bus Route) அறிமுகப்படுத்தியது அஜ்மான் போக்குவரத்து ஆணையம் (ATA) !

அஜ்மான் போக்குவரத்து ஆணையம் (ஏடிஏ) தனது 2021 ஆம் ஆண்டின் போக்குவரத்து விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக புதிய பொது பேருந்து வழித்தடத்தை (New Public Bus Route) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்த புதிய பாதை அல் முசல்லா பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, நுவைமியா வழியாக ஷேக் அம்மார் தெரு வரை செல்கிறது” என்று கூறினார்.

காலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இந்த பேருந்து சேவை கிடைக்கும் என்று ஏடிஏ இயக்குநர் ஜெனரல் ஒமர் பின் ஒமெய்ர் அல் முஹைரி தெரிவித்தார். இந்த வழித்தடத்தில் மொத்தம் 11 பஸ் நிறுத்தங்கள் உள்ளன.

“அமீரகத்தில் அதிகரித்து வரும் பொது பேருந்து சேவைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், அமீரகத்தில் பொது பேருந்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் மற்றும் போக்குவரத்து நெரிசல் மாசுபாட்டை குறைக்கவும் இச்சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று மேலும் கூறினார்.

பயணிகள் தங்களின் பேருந்து பயணத்தை பதிவு செய்ய ஸ்மார்ட் அப்ளிகேஷன்ஸ் மற்றும் ஆன்லைன் சேவைகளை அரபு, ஆங்கிலம், சீன மற்றும் உருது ஆகிய மொழிகளில் அஜ்மான் போக்குவரத்து ஆணையம் (ஏடிஏ) அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 10 பேருந்துகளில் மொபைல் போன் சார்ஜர்கள், வைஃபை, இன்டர்னல் டிஸ்ப்ளே திரைகள் போன்ற வசதிகளும் உள்ளன.

மேலும், பொதுமக்கள் பயண நேரங்களை பற்றி விசாரிக்க வாட்ஸ்அப் எண் 600599997 மூலமும், வலைத்தளம் ta.gov.ae அல்லது மின்னணு பயன்பாடு “மசார்” (MASAR) வழியாகவும் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார்.