Monday, March 2, 2026
TN News

தமிழகத்தில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு !

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பத்து மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இருப்பினும் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் லெட் (Tablet) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மேலும், இந்த மாதம் 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தைத் தவிர்த்து பிற மாநிலங்களில் 6 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் லெட் (Tablet) வழங்கப்படும் என்று கூறினார். மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் 6,7,8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றார்.