Monday, March 2, 2026
World

அவசர கால தேவைக்கு சீனாவின் CanSinoBIO கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு ஒப்புதல் !

பாகிஸ்தானிலும் கொரோனா தொற்றால் தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் (CanSinoBIO) கொரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் பைசல் சுல்தான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சுமார் 220 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்காசிய நாடுகளில் அவசரகால பயன்பாட்டிற்காக (Emergency Use Authroization) கொரோனா தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை பெறும் நான்காவது நிறுவனமானது சீனாவின் CanSinoBIO நிறுவனம்.

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்த ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

CanSinoBIO நிறுவனம் கடந்த வாரம் பல நாடுகளின் தடுப்பூசி சோதனையின் இடைக்கால செயல்திறன் முடிவுகளை வெளியிட்டது, இதில் பாகிஸ்தான் நாடும் ஒன்றாகும், கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ள கிருமிகளைத் தடுப்பதில் 65.7 சதவீத செயல்திறனையும், கடுமையான தொற்றுநோய்களைத் தடுப்பதில் 90.98 சதவீத வெற்றி விகிதத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.