இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு…ஒரே நாளில் 16,488 பேருக்கு தொற்று உறுதி !
இந்தியாவில் சமீப காலமாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 16,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,10,79,979 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,56,938 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,771 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்னிக்கை 1,07,63,451 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு 1,59,590 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,42,42,547 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

