துபாயில் கொரோனா விதிமுறைகளை மீறிய நிறுவனம் மூடல்..இரண்டு நிறுவனங்களுக்கு அபராதம்..!
துபாயில் கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக ஒரு நிறுவனத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். மேலும், இரண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும், ஆறு வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக ஆய்வாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகளைத் தொடர்ந்து துபாய் பொருளாதாரம் (DED) இந்த முடிவை அறிவித்துள்ளது.
மேலும், “துபாய் பொருளாதாரம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது மற்றும் துபாய் நுகர்வோர் பயன்பாட்டின் (Dubai Consumer App) மூலம் வணிக நிறுவனங்களில் ஏதேனும் விதிமீறல் அல்லது துஷ்பிரயோகம் இருப்பின் அது குறித்து புகார் அளிக்க வேண்டும்” என்று DED தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

