கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து 3-ஆவது டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி !
அகமதாபாத் : இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது.
போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 83 ரன்களை குவித்து இறுதி வரை விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
அதேபோல் ஜானி பேர்ஸ்டோவும் அவுட்டாகாமல் 40 ரன்களை எடுத்தார். இதையடுத்து இந்திய அணியின் 157 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி எளிதில் அடைந்தது. இதனால் 5 போட்டிகளை கொண்ட இந்த டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

