Saturday, October 18, 2025
National

துபாயின் குளோபல் வில்லேஜ்(Global Village) Season-25 இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு !

குடும்பங்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் ஷாப்பிங் இடமான குளோபல் வில்லேஜ் (Global Village), 25 வது சீசன், மே 2 2021 ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது.

குளோபல் வில்லேஜில் செலவழிக்க கூடுதல் நேரம் ஒதுக்குவதைத் தவிர்த்து, புனித மாதத்தின் முதல் சில வாரங்களில் ரமழானின் உணர்வை அனுபவிப்பதன் மூலம் இறைவனை இன்னும் அதிகமதிகம் நினைவுகூர முடியும். மேலும், ஒவ்வொருவரும் தனித்துவமான ரமலான் ஷாப்பிங் அனுபவத்தையும் பெற முடியும்.

ரமலான் மாதத்தில் இயக்க நேரங்கள் நிலையான நேரங்களிலிருந்து மாறுபடும். இஃப்தார் மற்றும் ஸஹர் நேரங்களின் போது விருந்தினர்களை தங்க வைக்க பூங்கா தினமும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.