துபாயின் துணை ஆட்சியாளரும் நிதி அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார் !
துபாயின் துணை ஆட்சியாளரும் நிதி அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் காலமானார்.
ஷேக் ஹம்தான், அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் சகோதரர் ஆவார்.
ஷேக் ஹம்தான் பின் ரஷீத் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி அமீரகத்தின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டதிலிருந்து நிதியமைச்சர் பதவியில் இருந்தார். நிதிக் கொள்கைகள் மற்றும் அரசாங்க செலவினங்களை மேற்பார்வையிடுவதில் அவர் ஒரு தவிர்க்க முடியாத பங்கைக் கொண்டிருந்தார்.
அமீரகத்தில் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தையை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்த பல உயர் மட்ட அரசாங்க நிறுவனங்களுக்கு அவர் தலைமை தாங்கினார். இதில் துபாய் நகராட்சி, அல் மக்தூம் அறக்கட்டளை, துபாய் அலுமினம் (துபால்) மற்றும் துபாய் நேச்சுரல் கேஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் துபாய் உலக வர்த்தக மையம் ஆகியவை அடங்கும்.
2006 ஆம் ஆண்டில், ஷேக் ஹம்தான் பின் ரஷீத் ராயல் பிரிட்டிஷ் கல்லூரியில் இருந்து மூன்று சான்றிதழ்களைப் பெற்றார். இது போன்ற தனித்துவத்தை அடைந்த முதல் ஆளுமை என்ற பெருமையைப் பெற்றவராக திகழ்ந்தார்.
ராயல் பிரிட்டிஷ் கல்லூரி-லண்டன், எடின்பர்க், மற்றும் கிளாஸ்கோ ஆகியவற்றிலிருந்து உள் மருத்துவத்திற்கான Honorary fellowship அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

