ஷார்ஜா: இன்று இரவு இருளில் மூழ்கும் மசூதிகள் மற்றும் கட்டிடங்கள் …காரணம் இதுதான் !
ஷார்ஜாவில் இன்று இரவு 8.30 மணிமுதல் 9.30 வரை மசூதிகள் மற்றும் முக்கிய கட்டிடங்களில் உள்ள விளக்குகள் அணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜா இஸ்லாமிய விவகாரத்துறை (The Department Of Islamic Affairs) சனிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இரவு எர்த் ஹவர் (Earth Hour) என்றழைக்கப்படும் திட்டத்தின் கீழ் இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள 140 நாடுகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் இத்திட்டத்தில் இணைந்து இன்று இரவு விளக்குகளை அணைக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு, இயற்கைக்கான உலகலாவிய நிதியம் (World Wide Fund for Nature) முதன் முதலாக இம்முயற்சியை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மேற்கொண்டது.

