ஷார்ஜா: ரமலானுக்கு முன்பு 25 புதிய மசூதிகளைத் திறக்க திட்டம் ! அதிகாரிகள் அறிவிப்பு !
ஷார்ஜாவில் உள்ள அதிகாரிகள் மூன்று புதிய மசூதிகளை திறந்துள்ளனர். புனித ரமலான் மாதத்திற்கு முன்னதாக திறக்கப்படவுள்ள 25 மசூதிகளின் ஒரு பகுதியாக இது திறக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் உள்ள இஸ்லாமிய விவகாரத்துறை, அல் சஜா தொழில்துறை பகுதியில் உள்ள ஹாதீப் பின் அல் ஹரித் மசூதி, அல் மனாக்கில் உள்ள அல் மனார் மசூதி மற்றும் திபா அல் ஹிஸ்னில் உள்ள அல் ஃபாதில் மசூதி ஆகியவற்றை திறந்து வைத்துள்ளது.
சுமார் 1,590 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட அல் மனார் மசூதியில் 90 பெண்கள் உட்பட 550 பேர் வரை வழிபடலாம். மேலும், இது ஒரு பெண் பயனாளி அளித்த நன்கொடையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரச்சாரத்தைத் தொடர்ந்து பெறப்பட்ட நன்கொடைகளால் ஹதீப் பின் அல் ஹரித் மசூதி கட்டப்பட்டது. மொத்தம் 5,009 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இம்மசூதி 900 க்கும் மேற்பட்ட ஆண்கள் வழிபாடும் அளவில் கட்டப்பட்டுள்ளது.
மேலும், இதே பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 70 பெண்கள் உட்பட 550 வழிபாட்டாளர்களின் திறனுடன் 1,110 சதுர மீட்டர் மொத்த பரப்பளவில் அல் ஃபாதில் மசூதியும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

