Monday, March 2, 2026
National

ரமலானில் தனியார்த்துறை ஊழியர்களுக்கான பணிநேரம் குறைப்பு…அமைச்சகம் அறிவிப்பு !

புனித ரமலான் மாதத்தில் அமீரகத்தில் உள்ள தனியார்த்துறை ஊழியர்கள் குறுகிய மணிநேரம் பணியாற்றுவார்கள் என்று மனிதவள மேம்பாட்டு மற்றும் அமீரக தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் வழக்கமான வேலை நேரத்தில் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ரமலான் மாதத்தில் நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் குறைக்கப்பட்ட வேலை நேரத்தை அமீரக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் மாதத்தில் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் அலுவலகபூர்வ வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கட்டாய பணியை மேற்கொள்ள தேவைப்படும் பணியாளர்களுக்கு இந்நேரக்கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.

அமீரகத்தில் பிறை தென்படுவதைத் தொடர்ந்து ரமலான் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.