Friday, October 17, 2025
IPL

ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

பஞ்சாப் அணியும் அதிரடியாக ஆடி 221 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 91, ஹூடா 64 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்கள். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மட்டுமே தனியாளாக போராடினார். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடவில்லை.

பட்லர், துபே, ரியான் பராக் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் அமைக்கவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் மட்டும் கேப்டனாக நின்று அதிரடியாக ஆடினார். ஸ்பின், பாஸ்ட் என்று பாரபட்சம் இல்லாமல் அதிரடியாக விளையாடினார்.

மொத்தம் 63 பந்துகள்களில் சஞ்சுசாம்சன் 119 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் இதுதான் சஞ்சுவின் பெஸ்ட் ஸ்கோர். இதில் 7 சிக்ஸ், 12 பவுண்டரிகள் அடக்கம். ஒரு கேப்டனாக முதல் போட்டியிலேயே ஐபிஎல்லில் சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற பெருமையைப் பெற்றார்.

கடைசி பந்து வரை அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி பந்தில் அவுட்டாகி சஞ்சு சாம்சன் அதிர்ச்சி அளித்தார்.

இறுதியில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.