ஷார்ஜா வரும் பயணிகளுக்கு புதிய கொரோனா பரிசோதனை நடைமுறை அறிவிப்பு !
ஷார்ஜா அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நடைமுறைகளை அறிவித்துள்ளது.
பயணிகள் கொரோனா நெகடிவ் PCR பரிசோதனை முடிவைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இது பயண தேதிக்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுத்திருத்தல் கூடாது என்றும் அறிவித்துள்ளது. முன்னதாக, இதற்கு 96 மணி நேரம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பு வெளியான ஐந்து நாட்களுக்குப் பிறகு புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ஷார்ஜா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்பும் PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.

