Monday, March 2, 2026
National

அமீரகத்தில் உள்ள பள்ளிகள் COVID – 19 நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படுகின்றன

பள்ளி மாணவர்கள் தங்கள் முதல் சமூக இடைவெளி வகுப்புகளுக்காக இன்று பள்ளி வளாகங்களுக்குத் திரும்புவதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தின் (KHDA) அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி நிர்வாகங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.

இருப்பினும், சில ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்னும் COVID -19 சோதனைகளுக்கு உட்படுத்தப்படாததால், சில துபாய் பள்ளிகள் தங்கள் பள்ளி வளாகங்களை மீண்டும் திறப்பதை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று வகுப்பறைகளுக்கு மாணவர்களை மீண்டும் வரவேற்பதற்கு பதிலாக, இந்த பள்ளிகள் வைரஸ் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதால் புதிய வகுப்புகளை ஆன்லைன் வகுப்புகளுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனைத்து துபாய் பள்ளி ஊழியர்களுக்கும் COVID -19 பரிசோதனையை அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) கட்டாயமாக்கியது.