ஷார்ஜா: இன்டர்சிட்டி பேருந்துகள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் !
ஷார்ஜாவில் இன்டர்சிட்டி பேருந்துகள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் 50 சதவிகித பயணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் ஜுபைல் (Jubail) பேருந்து நிலையம் மீண்டும் திறப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணத்தால் ஏப்ரல் மாதம் முதல் இந்தப் பேருந்து நிலையத்தில் இன்டர்சிட்டி பேருந்துகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கட்டுப்பாடுடன் பின்பற்றும் நிலையிலேயே இச்சேவை வழங்கப்படும் என ஷார்ஜா அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா காவல்துறையின் மத்திய செயல்பாட்டுப் பிரிவின் தலைமை இயக்குனரான அகமது சயீத் அல் நௌர் (Ahmed Saeed Al Naour), பயணிகள் அனைவரும் பிரயாணத்திற்கு முன்னதாக வெப்பப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். ஒவ்வொரு பயணம் முடிந்த பிறகும் பேருந்து தூய்மையாக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியை பயணிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். பயணத்தின் போது பிரயாணிகள் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் சானிடைசர் உபயோகிக்கவும் வேண்டும் என்று கூறினார்.

