இருமல், சளி இருக்கும் குழந்தைகளை வீட்டிற்கு திருப்பி அனுப்பும் துபாய் பள்ளிகள் !
கொரோனா அச்சத்தால் துபாயில் உள்ள பள்ளிகள் தங்கள் மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு இருமல், சளி மற்றும் மூச்சுத்திறனறல் ஏதேனும் இருந்தால் அவர்கள் உடனடியாக பள்ளிவாயல்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு தங்கள் இல்லங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எந்த ஒரு குழந்தைக்கும் ஏதேனும் அறிகுறி இருந்தால் அவர்கள் பள்ளி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் பள்ளி செவிலியர் (School Nurse) மற்றும் ஆரோக்கிய ஒருங்கிணைப்பாளர் (Wellness Coordinator) மாணவர்களின் பெற்றோர்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லையெனில் மட்டுமே மீண்டும் பள்ளி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதுவரை அவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து கல்வி கற்பார்கள் என கிரெடென்ஸ் உயர்நிலைப்பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிகா தாப்பர் சிங் கூறினார்.