Monday, March 2, 2026
World

பாரிஸ்: மிக உயரமான கட்டிடத்தில் ஏறிய வாலிபர் கைது !

பாரிஸில் உள்ள தி டூர் மாண்ட்பர்னஸ்ஸே (The Tour Montparnasse) கட்டிடம் பிரபலமான ஈபிள் கோபுரத்தைப் போல உயரமாக இல்லை, ஆனால் பாரிஸ் நகர மையத்தில் உள்ள ஒரே வானளாவிய கட்டிடமாக திகழ்கிறது.

பாரிஸில் உள்ள மிக உயரமான கட்டிடமான டூர் மாண்ட்பர்னஸ்ஸின் முகப்பில் ஏறி ஒரு நபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் அலுவலக கட்டிடத்தை (Office Block) எந்த வித பாதுகாப்பு கருவிகளும் இன்றி சுமார் 210 மீட்டர் (690 அடி) வரை ஏறி இருக்கும் நிலையில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அதிகாலையில் ஏறத் தொடங்கிய அவர், இரவு 8:00 மணிக்கு (1800 ஜிஎம்டி) ஒரு மீட்புப் பணியாளர் கயிற்றில் இறங்கி அவருடன் கட்டிடத்தின் உச்சிக்கு சென்றபின் கைது செய்யப்பட்டார்.

டூர் மாண்ட்பர்னாஸ்ஸில் ஒருவர் ஏறுவதை காண்பது இது முதல் முறை அல்ல. 2015 ஆம் ஆண்டில் பிரெஞ்சு “ஸ்பைடர்மேன்” அலைன் ராபர்ட், நாட்டில் பேரழிவு தரும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, கையில் நேபாளக் கொடியுடன் ஏறி துணிச்சலான சாதனையை நிறைவு செய்தார்.