Saturday, October 18, 2025
National

அபுதாபி: ரமலான் கூடாரங்களுக்கான அனுமதிக்குத் தடை…நகராட்சி அறிவிப்பு !

அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை 2021 ஆம் ஆண்டின் ரமலான் கூடாரங்களுக்கான அனுமதியை தடைசெய்து அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை ட்விட்டரில் வெளியிட்ட பதிவின் படி, “இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் எவ்வித கூடாரங்களும் அங்கீகரிக்கப்படாது”.

மேலும், “ரமலான் மாதத்தில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (National Emergency Crisis and Disasters Management Authority) கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.