அபுதாபி: 3.5 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் புதிய பார்க்கிங் இடத்தைத் திறந்த நகராட்சி !
அபுதாபியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் விதமாகவும் மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கத்துடனும் அபுதாபி நகராட்சி அபுதாபியின் E25 பகுதியில் கூடுதல் பொதுப் பார்க்கிங் இடங்களைத் திறந்துள்ளது.

அபுதாபியின் அல் மாமோரா வீதி (Al Mamoura Street) மற்றும் அல் பஹ்ர் டவர்களின் (Al Bahr Towers) முகப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பார்க்கிங் இடத்தை அமைப்பதற்கு 3.5 மில்லியன் திர்ஹம்ஸ் செலவானதாக அபிதாபி நகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பார்க்கிங் இடங்கள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அலுவலக டவர்கள் ஆகியவை அமைந்துள்ளன. இவை அபுதாபியின் வளர்ந்துவரும் முக்கிய பகுதிகளில் ஒன்றாகும் என்று அபுதாபி நகராட்சி கூறியுள்ளது.