Monday, March 2, 2026
BusinessNational

அபுதாபி Duty Free Service: வீட்டு விநியோக (Home Delivery) சேவையை அறிமுகப்படுத்துகிறது

அபுதாபி விமான நிலையங்களின் துணை நிறுவனமான அபுதாபி விமான நிலையம் Duty Free, ஒரு புதிய வீட்டு விநியோக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அமீரகத்தில் வசிப்பவர்கள் அபுதாபி Duty Free தயாரிப்புகள் மற்றும் சர்வதேச பிராண்டுகளின் பொருட்களைத் தேர்வு செய்து தங்கள் இல்லங்களில் நேரடியாக பெறக்கூடிய வசதியை வழங்க அனுமதி அளித்துள்ளது .

அபுதாபி விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ஷரீஃப் அல் ஹாஷ்மி கூறியதாவது: “அபுதாபி Duty Free இலவச வீட்டு விநியோக சேவையை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறாமல் தங்களுக்கு தேவையான பிரபலமான பொருட்களை (International Brands) நேரடியாக தங்கள் இல்லங்களில் பெறமுடியும்.

மேலும் பாதுகாப்பாக ஆன்லைன் (Online) மூலம் பொருட்களை தேர்வு செய்து பெறக்கூடிய வசதியையும் வாடிக்கையாளர்கள் பிற்காலத்தில் வாங்க வேண்டிய தயாரிப்புகளின் ‘விஷ் லிஸ்ட்ஸ்’ (Wish List) வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களின் எந்தவொரு கேள்விகளுக்கும் உதவவும் பதிலளிக்கவும் அபுதாபி Duty Free இன் வாடிக்கையாளர் சேவை மையம் வணிக நேரங்களில் கிடைக்கும் மற்றும் வாடிக்கையாளர்களின் அனைத்து பொருட்களும் அராமெக்ஸ் (Aramex) மூலம் வழங்கப்படும்”.