தமிழகம்: சென்னையில் மாபெரும் புத்தக கண்காட்சி – பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறும்!
சென்னையில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44வது புத்தக கண்காட்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பபாசி (BAPASI) அறிவித்து உள்ளது. புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளையொட்டி புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் நடைபெற உள்ளது . இதில் 700 க்கும் மேற்பட்ட புத்தக கடைகள், நாவல்கள், பல லட்சம் தலைப்பினை கொண்ட நூல்கள், லட்சக்கணக்கான வாசகர்களின் வருகை என்று பபாசி நடத்தும் சென்னை புத்தக கண்காட்சி களைகட்டும்.
இந்த புத்தக கண்காட்சில் ஆண்டுதோறும் ஏராளமானோர் புத்தகங்களை வாங்கி பயன் பெறுவார்கள்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த கண்காட்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்பதை பபாசி தெரிவித்துள்ளது .