அதிரடித் தள்ளுபடி வழங்கும் கேரிஃபோர் (Carrefour)… ஜூலை 2021 வரை 50 சதவீதம் வாராந்திர தள்ளுபடி !
கேரிஃபோர் (Carrefour) நிறுவனம் மக்களுக்கு அதிரடியான சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மளிகை பொருட்கள், காய்கறிகள், பிற உணவுப்பொருள்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆகியவற்றிற்கு ஆறு மாதம் வரை (ஜூலை 2021) 50 சதவீதம் வாராந்திர தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி (It’s a Big Deal) என்று அழைக்கப்படும்.
இதுகுறித்து, மஜீத் அல் ஃபுட்டைம் ரீடெய்லில் உள்ள கேரிஃபோர்-ன் மேலாளர் பிலிப் பெகுலிஹன் கூறுகையில், “கொரோனா தொற்று மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், இதன் காரணத்தால் (It’s a Big Deal) எனப்படும் இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய அதிரடித் தள்ளுபடியை நாங்கள் வழங்க உள்ளோம், மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் கேரிஃபோருக்கு வரும்போது உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்” என்று கூறினார்.
அமீரகத்தில் உள்ள எந்த ஒரு கேரிஃபோர் ஸ்டோர் மூலமாகவும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் 50 சதவீதம் வரையிலும் தள்ளுபடியைப் பெறலாம். குறிப்பாக வாராந்திர சலுகைகளில் உங்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

