Friday, October 17, 2025
National

கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகள் ரமலான் தொடக்கம் வரை நீட்டிப்பு !

துபாய்: பிப்ரவரி தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகள் ஏப்ரல் மாதத்தில் ரமலான் தொடங்கும் வரை நீட்டிக்கப்படும் என்று துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு, ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அமீரகத்தில் சமீபமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி அதிகாரிகளின் பரிந்துரைகளின் படி மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் செயல்திறனின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் தொடங்கும் வரை நீட்டிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடைமுறைகள் பின்வருமாறு:

  • பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு மற்றும் உட்புற நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சம் 50 சதவீதம் மட்டுமே அனுமதி (கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன்).
  • ஷாப்பிங் மால்கள், விருந்தினர் ஹோட்டல்கள், உட்புற நீச்சல் குளங்கள் மற்றும் கடற்கரை ஹோட்டல்கள் இயங்க அதிகபட்சம் 70 சதவீதம் வரை மட்டுமே அனுமதி.
  • உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் அதிகாலை 1.00 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
  • பப்கள் / பார்கள் (Pubs/Bars) தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தீவிரமான கண்காணிப்பு மற்றும் ஆய்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.