Monday, March 2, 2026
HealthNational

COVID-19 (Sep 20): புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்- 674, குணமடைந்தவர்கள்- 761, இறப்பு ஏதும் இல்லை

அமீரகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 674 ஆக இருப்பதால் இதுவரை அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84,916 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 761 ஆக இருப்பதாக அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பு (MoHAP) இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது.

இன்று புதிதாக இறப்பு ஏதும் இல்லை. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 404 ஆக இருக்கின்றது.

மேலும் புதிதாக மேற்கொண்ட 92,000 பரிசோதனையின் மூலம் இந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று வரை அமீரகத்தில் 8.7 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.