COVID-19 (Oct 10): புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்- 1129, குணமடைந்தவர்கள்- 1070, இறப்பு -1
அமீரகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1129 ஆக இருப்பதால் இதுவரை அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 105,133 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1070 ஆக இருப்பதாக அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பு (MoHAP) இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டது.
அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் புதிதாக மேற்கொண்ட 136,430 பரிசோதனையின் மூலம் இந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று வரை அமீரகத்தில் 10.1 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.