COVID-19 (Today): புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்- 640, குணமடைந்தவர்கள்- 468, இறப்பு ஏதும் இல்லை.
அமீரகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 640 ஆகவும், பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 468 ஆகவும் இருப்பதாக அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைப்பு (MoHAP) இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டது. இன்று புதிதாக இறப்பு ஏதும் இல்லை.
மேலும் புதிதாக மேற்கொண்ட 84,000 பரிசோதனையின் மூலம் இந்த புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு வசதியாக நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை விரிவாக்குவதையே அதன் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இன்று வரை அமீரகத்தில் 8 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.